மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

அவளில்லை. இன்று……..

என் வீட்டில் அத்தனையும்
நித்தமுமாய் நித்தமுமாய் பளபளக்கும்
தூசி. கிடையாது துலங்கும் பாத்திரங்கள்
அட எத்தனை வசதியாய் இவ்விடம்

ஒரு வாரம் ஒரே வாரம் அவளில்லை
உணவில்லை உயிர்ப்பில்லை
அதட்டும் குரலில்லை ஆரவாரமில்லை
கேட்பாருமில்லை. முடங்கின அத்தனையும்

ஓ அவள்தான் அத்தனையுமாய் இருந்தாளோ
நோவினில் களைப்பினில்-தினம்
ஓடி ஓடி நொடித்தவள் உதவிக்கரம் தேடி
காத்திருந்திருப்பாளோ. உணராமல்நாம்

மெல்ல உறைத்தது பசியினால் வலித்தது
அவள் அமிழ்தினைத் தேடிய உணர்வு
அவள் இயந்திர ஓட்டத்தில் தான் அனைத்துமோ
புரிந்ததும் வலிக்கிறது ஆனால்

தூசி படிந்த தளத்தில் துயரின் சுமை நிறைத்து
ஆம் அவளின்றி கனக்கிறது மனது
அவளைச் சுமந்தபடி………..,..

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading