ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”

ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே… இதுவும் கொடையே “ 16.10.2025

நீலவானம் நிறைந்தபூமி பரந்தகடல்
விரிந்தகுடா உயர்ந்தமலைகள் மரஞ்செடிகொடி
அத்தனையும் இயற்கையின் கொடையே
இலையுதிர்காலம் இயற்கையின் வரமே
இலைகள் விழும்ஓசை உலகின் இசையே !

பசுமை மரங்கள் பழைய ஆடையகற்றி
புதுமையை வரவேற்க தயாராகுது
இலைகள் உதிர்வது முடிவல்ல
புதிய கிளைகள் பிறக்கும் முன்னுரையது
இயற்கை நமக்கு கற்பிக்கும் பாடமது
விழுவதுதான் எழுகைக்கான வேதமிது !

மஞ்சள்சிவப்பு வண்ணம்பூசி மரங்கள்மலர
மழைத்துளிகளும் தென்றல்காற்றில் தாலாட்டுப்பாட
பூமித்தாயும் சில்லென்று சிலிர்க்கும் சிங்காரக்காலம்
இலையுதிர்காலம் நம்பிக்கையின் சின்னம்
இயற்கை சொல்லும் வாழ்க்கைப் பாடம்
இயற்கையின் வரமே இதுஇயற்கையின் கொடையே !

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading