இராவிஜயகௌரி

மீண்டெழும் கனவுகளை
மாண்டெழும் பொழுதுகள் துரத்தி
கொண்டெழும் வீரியக் கணத்தால்
வென்றெழும் நொடிகளோ. இவை

ஆம் திசைகள் தோறும் சிதறிப் போனோம்
சேரிடம் அறியா சேய்களாய் தொலைந்தொம்
பாரிடம்எங்கள்புகலிடம் கேட்டோம்
பட்டிகள்தொட்டிகள் வாழ்விடம் நிலைத்தொம்

அறிவை மூட்டை கட்டிய நொடிகள்
அகதிகள் குழியில்தேடலின் எச்சம்
தாழ்வைத் தாங்கிய. மனங்களின் சுமைகள்
பணமே எங்கள் குறிக்கோள். வாழ்வு

ஓடிய நொடிகளில் மூப்பும் கனிய
தலை நிமிர்ந்த நொடியில்அட வெள்ளியின் பிடியில்
மீண்டு எழுவோம். மீதியை. நிறைக்க
விட்டவை தொட்டவை வெளிகளை. நிரப்ப

ஏதிலி மனித இழிவினைக் கலைத்து
நாடிடும் பொழுதினை நயமுற விதைத்து
இணைந்திடும். உறவே. ஏற்றவை படைக்க
வாழ்வின் நொடிகள் விரையுது. உணர்வாய்

Nada Mohan
Author: Nada Mohan