மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

இரா விஜயகௌரி

வெறுமை போக்கும் பசுமை…….

பசுமை போர்த்தும் மகளாள் -இவள்
எழிலின் வனப்பே. உயிர்ப்பூ
வளங்கள் நிறைத்த பேரெழிலை
வழங்கிடும் அழகே வளர்ச்சி

நீர்மகள் நிலமகள் இணைந்து
எழுதிடும் காவியம் பசுமை
உயிர்த்தீ. வதைத்திடும் வறுமை
அதை களைந்திடும் வேரே பயிர்தாம்

வெறுமையை. மனதுள் விதைக்கும்
வறுமையின் நிலைதான் முடக்கம்
சிறுமைகள். களைந்ததோர் சீர்தான்
செழித்தெழும் பெருவளம். பசுமை

தினமும். ரசித்திட. வைக்கும்
பலமும் திடமும நிறைக்கும்
வளங்களை வார்த்தெழும். செழுமை
அங்கு நிலைபெறும். வாழ்வியல் வளர்ச்சி

மண்ணும் நீரும். மலரும் செடியும்
உறவின் பிணைப்பை. வரைந்து
உலகின் உயிர்களை உயிர்ப்பொடு. ஏற்று
இருகரம் தாங்கிடும் புரட்சித்தளையே பசுமை

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading