இரா.விஜயகௌரி

நிலையற்ற யாக்கை…….

பூமிப்பந்தொரு. வாழ்க்கை
புதிதென தினமும் மாற்றம்
அறியாப். பெருந்நொடி
தெரியா முகங்களாய். திருப்பம்

புரியா மனிதர்களாய் நாம்
நிலையென. எண்ணி நிதம்
நிலையா உலகினில். ஓட்டம்
கலையும். கனவாய். தொடரிது

சேர்த்துச் சேர்த்து சேமிப்பில் இட்டு
உண்பதும் இன்றி உடுப்பதும் இன்றி
நாளைப்பொழுதினைக் கணக்கினிலிட்டு
மூட்டை கட்டிடும் முட்டாள்கள் நாம்

மூச்சை இழுக்க முனைய மறுத்தால்
இதயக்கதவு இயல்பினை மறக்கும்
காற்றின் பெருநொடி. கலங்கி நின்றிடின்
கனக்கும் பெருவெளி நிலையை இழக்கும்

அட்டா வாழ்வு இதுவென உணரின்
எதற்கென ஓட்டம் இயல்பை மறந்து
பொருள்பட எழுதி புரிந்து வாழ்ந்து
நொடிகளை எல்லாம் வாழ்வாய்ச் சமைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading