இர.விஜயகௌரி

அம்மா. பேசலாமா………..

பாலக பருவம் பழகிடும் குழந்தை
இனிதாய் தொட்டும் எடுத்தும்
தொடர்ந்திட. மலர்ந்தும்-தினம்
எழலாய் மகிழ்ந்திடும் நொடிகள்

உனக்குள் கருவாய் புதைந்தவள் யான்
புதையலாய் மகிழ்வாய் என்றிருந்தேன்
புதருள் சருகாய் அல்லவா எந்தனை
விட்டு மறந்து விடலையைக் கடந்தாய்

நோயின் பிடியில் சுழன்றவர் அப்பா
இருந்தும் பாசக் கயிற்றால் இறுக்கி
பரிதவிப்பை என்னுள் கடத்தி -என்னை
இறுதி நொடியிலும் தவிக்க வைத்தார்

பசியில் துடித்த அந்த நிமிடங்கள்
பாசத்தை தேடிய இறுதிக் கணங்கள்
தோற்றது நானல்ல அம்மா உங்கள்
மனித நேயமும் மானுடக் கடமையும்

உன் போன்ற பெற்றவர்க்கு
எதற்கு எதற்காக குழந்தைகள்
கருவினில் அழித்தாவது எங்களுக்கு
கதறி அழும் பேரிடியை தாராதிருங்களேன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading