இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 171
உழைப்பு
சிற்பியின் உழைப்பு சிலை
கலைஞனின் உழைப்பு கலை
விவசாயின் உழைப்பு உணவு
விஞ்ஞானியின் உழைப்பு புதுமை

உழைப்பின்றி கிடைக்காது வெற்றி
உழைத்தால் கிடைப்பது உடலுறுதி
உழைப்பால் விலகும் உள்ளத்தினிருள்
தளாரா உழைப்பு தருமே மதிப்பு

உழைப்பே உயர்வு என்பார்
உழைத்தவனின் உயர்வோ குறைவு
உழைக்காதவனோ பிரமாண்ட உயர்வு
உயர்வு எது எனும் குழப்பத்தில் நானே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan