முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..

வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி உலகில் புதுப்புது நுட்பம்
வித்தக வேட்கையும் விரும்பிய துறையும்
முத்தமிழ் மகுடமே முழு உலகிடை சரிதம்
எத்தனை எத்தனை நாட்டவர் கற்கிறார்
செழுமையைச் செப்புவார்
அறிஞர்கள் பலராய் ஆய்வு செய்கிறார்
அருந்தமிழ் மொழியே முதன்மை என்கிறார்
அகிலப்பரிதியை ஆண்ட தமிழ்
அன்னைமொழியாய் ஆதித்தமிழ்

ஆழி கடந்தும் ஆளும் செந்தமிழ்
மூத்தமொழியே முதன்மைத்தமிழே
கலங்கரை விளக்கே காவியச் சிந்தே
ஞாலக்குன்றில். நற்றமிழ் வேராய்
நோக்கும் திசையெங்கும் மகுடத்தின் மாண்பே!
ஈர்க்கும் எம்தமிழ் இதயத்தின் கரும்பே! மிக்கநன்றி

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading