நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
உயிரில் கலந்து உணர்வில் உறைந்தவர்கள்
கவி 750
உயிரில் கலந்து உணர்வில் உறைந்தவர்கள்
தியாகம் உருவங்கொண்டு கண்ணெதிரே உலவியது
வீரம் வெளிப்பட்டு இவர்களால் பெருமையடைந்தது
விடியலுக்காய் வடிவெடுத்த ஊரறிந்த உன்னதர்கள்
மரணித்தும் மரணிக்காத மாட்சிமை கொண்டவர்கள்
போர்க்களமே வீடானது போராட்டமே வாழ்க்கையானது
கண்ணுக்குள் தாயகக்கனவு இலட்சியம் மூச்சானது
உறுதியான மனங்கொண்டவர்கள் வலிகளையும் வழிகளாகினார்
இவர்கள் அற்புதமானவர்கள் அற்புதங்களாகவே நிகழ்த்தினார்கள்
தம்மைவிட தம் இனத்தை நேசித்தவர்கள்
மண்ணை மீட்க கந்தகக்காற்றை சுவாசித்தவர்கள்
அச்சத்தை விட்டகற்றி உச்சத்தை தொட்டவர்கள்
சந்ததிக்காய் தந்துயிரை வரலாறு கண்டவர்கள்
அங்கங்களை இழந்திருந்தும் ஓய்வென்று ஒதுங்கவில்லை
தங்களை அர்ப்பணிப்பதில் பின்தங்கியதும் இல்லை
அல்லும் பகலும் மண்ணுக்கான உழைப்பு
எல்லைதனை காத்தங்கே சாமியாக நிலைப்பு
மறவர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதமிது
மறக்காது அவர்களை மீட்டிக்கொள்ளும் மாதமிது
எல்லாப் புகழுக்கும் உரித்தானவர்கள் அவர்களே
உள்ளவரை தமிழினம் மறக்காத செல்வங்களே
ஜெயம்
21-11-2024
