எல்ஆளன்

“விடுமுறை களிப்பு “
சந்தம் சிந்தும் சந்திப்பு 233

“வேரடிஉறவெல்லாம் வெவ்வேறு நாட்டில்
வேண்டிய பொழுதில்
தொலைபேசி களிப்பில்.

நேரடி காண
நெருடும் பாசம்
நெஞ்சுக்கு தருமே
விடுமுறை காலம்.

மகள் வழி பேத்திக்கு
பூப்பு நீராட்டு
மங்கல விழாவுக்கு
ஆண்டாய் ஏற்பாடு.

அவளிடம் கனடாக்கு
ஆகாய பயணம்.
அண்ணர்,பேரரையும்
அணைக்க தருணம்.

மருமகன் சகோதர
குடும்பங்கள் ஐந்து
ஒரு கர விரல்களாய்
ஒற்றுமை கொண்டு.

மருதாணி மை தீட்டு,
மஞ்சள் நீ ராட்டு,
ஆலாத்தி ,அலங்காரம்
அணியாரம் போட்டு.

வாகன ஊர்வலம் மண்டபம் வரையில்
வண்ண உடை அணி
மங்கையர் நிரையில்.

அப்பம் ஒருபுறம்
சுடச்சுட கொடுப்பு,
ஆய பல் தின் பண்டம்
ஆங்கீங்கு நிறைப்பு.

காலை மதியம்
இரா உண வோடு,
களியாட்டம் பன்பல்
இதம் பதத் தோடு.

அண்ணர் குடும்பம்
ரொரொன்ரோ வாசம்,
அவர் மகள் இருவர்
அழைத்தது. பாசம்.

மகாஜனா சாரண
நண்பர்கள் அழைத்து
மகிழ்வுற விடுதியில்
விருந்துண்டு களித்து.

அன்நாள் நண்பர்கள்
பழகிய நினைவினை
அவரவர் மனைகளில்
அழைத்து பகிர்ந்தனர்

அண்ணர் மகளின்
அழைப்பில் உறவினர்
பொன் மாலை ஒன்றை
பொலிவாய் நிறப்பினர்.

நேர்முக. மாக
பாமுக உறவு
தாயுடன் வந்ததும்
நேய நல் அன்பு.

அதிபர் கனக
சபாபதி அமைவிட,
நிழ்வில் நினைவுரை
நிகழ்த்தவும் வாய்ப்பு.

நினைவுகள் பற்பல
நீங்காது நின்று
நெஞ்சின் சுழலுது
மகிழ் வினை தந்து.

விடுமுறை கழித்து
மனை இடம் மீள
மறுமுறை வரவும்
மனம் தினம் உந்தும்.
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading