மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

ஒளவை

வராமல் வந்த நாயகன்
≠====≠=====≠====≠====≠
மாலை நேரம்
மங்கும் ஒளியில்
சாலை ஓரம்
சாடை பேசிட
வேளை மறந்து
வெட்கம் இன்றிக்
காளை உன்னைக்
காணத் துடிப்பேன்

முரட்டுப் பார்வை
மனதைத் தைக்க
மிரட்டிப் போவாய்
மீண்டும் மீண்டும்
வரட்டுக் கெளரவம்
விட்டுத் தள்ளி
விரட்டி விரட்டி
வருவேன் பின்னால்

நாளும் பொழுதும்
நாயாய் உன்னை
நீளும் கனவுடன்
நித்தமும் தொடர்ந்து
ஏழு சென்மமும்
என்னவன் என்று
வாழும் வாழ்வை
வரமாய்க் கண்டேன்

மனதில் உன்னை
முழுதாய் நிறைக்கச்
சினந்து ஒதுக்கிச்
சீற்றம் கொள்வாய்
கனவில் மட்டும்
கைக்குள் வந்து
தினமும் உருகிக்
காதல் செய்வாய்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading