காதலின் பெருமை 2157 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
உயிரான உறவு
-
By
- 0 comments
கஞ்சா
வையத்தில்அஞ்சுவதற் கஞ்சா
கொள்ளை போகும் அவமானத்திற் கஞ்சா
அருளின்றி பொருள் காண களவாய்
வளர்த்த செடி கஞ்சா
இறைத் தண்டனைக் கஞ்சா
நெறி பிறழும் பொய்மைக் கஞ்சா
பஞ்சமா பாதகத்துக் கஞ்சா
தொலைந்து போகும் காலத்திற் கஞ்சா
குடும்பச் சீரழிவுக் கஞ்சா
உறவுகளின் எதிர் காலத்திற் கஞ்சா
நாசமாகும் விளைவுக் கஞ்சா
வீழ்த்த வரும் பெரும் பகைக்கஞ்சா
பாவத் தீர்ப்புக் கஞ்சா
அநீதிக் கஞ்சா
மானம் மரியாதைக் கஞ்சா
பொய்ச்சான்று அவதூறுக் கஞ்சா
தீய செயல்களுக்கஞ்சாதோரிடையே
தம்பியுடையான் படைக் கஞ்சா
நெஞ்சுறுதியுடையான்
போருக்கஞ்சா
படைக்கஞ்சா
படை நடுங்கும் பாம்புக்கஞ்சா
பகைவரை எதிர்ப்பதற்கஞ்சா
எதிரியைத் தாக்குவதற்கஞ்சா
துன்பத்திற்கஞ்சா
வறுமை கொடுமைக்கஞ்சா
உண்மை பேசுவதற்கஞ்சா
நீதி நேர்மைக்காய் தட்டிக் கேட்பதற்கஞ்சா
சாதிப்பதற்கஞ்சா
இமயமேறுவதற்கஞ்சா
உச்சம் தொடுவதற்கஞ்சா
துணிவுடன் நடை பயில்வதற்கஞ்சா
எதிர்கொள்ள வரும்
சாவுக்கஞ்சா
வீரன்
நன்றி வணக்கம்,
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments