வரமாகும் வாய்ப்புக்களே…

வசந்தா ஜெகதீசன் வரமாகும்வாய்ப்புகளே.... வாழ்வெனும் மலர்த்தோப்பு மலர்ந்திடும் வேளை வரங்கள் பல எமதாகும் வாய்ப்பிற்குள் நாளை இருசுடராய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

நடிப்பு
நல்லது நடிப்பு நாலுபேர் சிரிப்பு
நலமாய் வாழ நமக்கது வேண்டும்
வல்லமை கொண்டு வாழ்வது இன்பம்
வரட்டுக் வாழ்வு நடிப்பின் உச்சம்/

அன்பு என்ற ஆயுதம் உலகில்
ஆளும் உண்மை ஒன்றே மெய்யாம்
என்பும் பிறர்க்கு உரித்தாம் என்று
எழுதி வைத்தார் வள்ளுவர் அன்று/

முகத்தில் மூடி அணிந்து வாழும்
மூடர் கூட்டம் இருக்கும் வரையும்
நேர்மை என்ற நீதி மறையும்
நன்மை யாவும் நலிந்து மறையும்/

உள்ளும் புறமும் உண்மை வேண்டும்
கள்ளம் இல்ல அன்பு வேண்டும்
திண்ணம் ஆன தீர்ப்பு வேண்டும்
தீமை எல்லாம் தீர வேண்டும்/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading