தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கவலைகள்

கவிதை 801

மெல்ல மெல்ல மனதின் சுவர்களை
உப்புறமாக சுரண்டும் மௌன சிராய்ப்புகள்
கேட்கப்படாத கேள்விகள் சொல்லப்படாத பதில்கள்
என்ன ஆகுமோ என்ற வாக்கியம்
அடுக்கடுக்காக கவலைகளாக உள்ளத்தில் குடியேறும்

நினைவுகளின் சாலையில் திரும்பத் திரும்ப
முன்னும் பின்னும் நடக்க வைக்கும்
தூக்கம் கண் கதவை தட்டும்
எண்ணங்கள் உள்ளே பூட்டிக்கொண்டு விழித்திருக்கும்

ஒரு மனம் புன்னகைத்து மகிழ்கின்றது
மற்றொன்று கவலைகளுள் சிக்கித் தவிக்கின்றது
மனம் மெதுவாக கற்றுக்கொள்ள பழக்கட்டுமின்று
கவலைகள் வாழ்க்கையின் முகவரி அல்லவென்று

ஜெயம்
18-12-2025

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading