கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

தமிழ்

ராணி சம்பந்தர்

மூதாதையரில் முழங்கியது
முழங்கியவரில் புழுங்கியது
புழுங்கியவரில் பூ பூத்துக்
குலுங்கிய மொழியே தமிழ்

பெற்றோர் தினம் பேசியது
உற்றார் உறவினர் பூசித்தது
நண்பர் ,காதலர் நேசித்தது
உதிர உறவில் யாசித்தது

அண்ணா ,அக்கா , தம்பி ,
தங்கை , மாமா ,அத்தை ,
பெரியப்பா ,பெரியம்மா
சித்தப்பா , சின்னம்மா
எந்த மொழியிலுமிலாது
பேச ருசித்தது

கதை பேசிக் காவியம் பாடும்
பதைபதைக்க கருத்தும் கூடும்
இயல் ,இசை ,நாடகம் ஆடும்
சங்க இலக்கியமே தேடிடும்
வாணிகமே இனிமை நாடும்

மழலையில் வாய் குவித்திட
உள்ளம் பூரிக்கக் குறும்பும் ,
குதூகலமும் துள்ளித்துள்ளிக்
குதித்து விளையாடும் கனிவு
மொழியே தமிழ் தமிழ் .

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading