28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு!
முள்ளிவாய்க்கால்!
நெஞ்சகலாப் பாரம்
நினைவழியாக் கோரம்
பிஞ்சுகளும் பேதையரும்
பிணமாக்கிய தீரம்
தஞ்சம் அடைந்தோரையும்
தகர்த்திட்ட வெறியாட்டம்
வஞ்சகத்தின் மூர்க்கம்
வரலாறான குரூரம்!
சமாதான மன்றுகளும்
சமாதியாகி நிற்க
மிதவாதிகள் நிகழ்த்திய
மிலேச்சத்தனத்தின் உச்சமாய்
வெட்ட வெளியிலே
மக்களைக் கூட்டி
கொத்துக் குண்டுகளும்
கூவிய செல்களாலும்
கொன்று குவிக்க
கூவியழவும் நாவறண்டு
குலநாசமானது முள்ளிவாய்க்கால்!
காலமாற்றும் புண்ணல்லவிது
காலாதிகால வலி
ஞாலமே காணாத
நயவஞ்சகச் சதி
சொந்த மண்ணிலேயே
அகதிகளாக்கிய பழி!
வெந்து துடித்த
வேதனையின் நாட்கள்!
ஆறாத ரணமுடன்
மாறாத சுமையுடன்
நீறாகிக் கிடக்குதே
நேசமான முள்ளிவாய்க்கால்!
கீத்தா பரமானந்தன்22-05-23

Author: Nada Mohan
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...
26
Aug
வணக்கம்
வசந்தாஜெகதீசன்
வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு
ஆரோக்கியஉணவின்முதலீடு
முயற்சியின்மூலதனமாகும்
முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே
பொழுதுபோக்கின் முதன்மை வலு
முதலீடு அற்ற வருமானம்
நித்தம் நித்தம் பயனாகும்
பலராய்...
25
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை
இலக்கம் _199
"திருவிழா"
ஊர் கூடி
உறவு கூடி
உற்சவ பெருவிழா
ஒன்றிணைக்கும் திருவிழா!
அலங்கார ஆராதனை...