தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

தலைப்பு!
மனத்தின் கருத்தை
கோர்த்து நின்றே
மகிடஞ்சூட்டும் ஆரம்!
மறுகி நின்றே
மணிக் கணக்காய்
மலைக்கவைக்கும் பாரம்!
கவிதை புனைய
நம்மையும் பாடாய்
அலைக்கும் சிலநேரம்!

தொடுத்த படையல்
தோரணம் ஆக
கருவாகும் சாரம்!
பார்த்த கணத்தில்
படரவும் சொல்லும்
பக்கம் பாராது
ஓடவைக்கும் தூரம்!

கையில் மையில்
காட்சிகள் மாற்றும்!
பொய்யைப் புரட்டிப்
புழுதியாய்த் தூற்றும்!
தையல் தாவணி
மெருகைக் கூட்டும்!
தலைப்பைக் காட்டி
மதியை ஏய்க்கும்!

தாயும் அன்பாய்த்
தலையைத் துவட்டித்
தாங்கியே நிற்கும்
சேலைத் தலைப்பு!
காலை மாலை
செய்திகளாகிக் கவரும் வளைப்பு!
உலகே இன்று
மயங்கிக் கிடப்பதும்
வலைப்பூ!

கீத்தா பரமானந்தன்
18-09-23

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading