“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சாதனை!
சந்தம் சிந்தும்சந்திப்பு

வேதனைகளை வேரறுக்கும்
வீறுடை பயணம!
வீழ்ந்தவர் எழுந்திட
வித்திட்ட பாலம்!
காலநேரக் கணக்கின்றிக்
கனிந்திடும் தியாகம்
காண்கின்ற நிறைவினிலே
காட்சியாகும் பாகம்!

தொட்டவை துலங்க
தொடராம் உழைப்பில்
எட்டிடுமே சிகரத்தை
எழிலாகச் சாதனை!
சாதித்து வென்றவரின்
காட்சியான களிப்பெலாம்
சாட்சியாகி மிளிர்ந்தே
ஆட்சிசெய்யும் சாதனை!

போதனையல்ல இது
பொகிசமாம் ஏடு
மேதினியின் ஆயுளை
மெருகேற்றி வைத்தே
ஆழத்தட மாக்கிடும்
ஏதாமாம் சாதனை,

கீத்தா பரமானந்தன்21-02-2023

Nada Mohan
Author: Nada Mohan