கீத்தா பரமானந்தன்

அழியாத கோலம்!

அன்னை மடியில் அவதரித்த போதிலே
ஆடிஅடங்கும்வரை அசைக்க முடியதாபடி
ஆண்டவன் தலையில் ஆழமாய் போட்டானே
அழியாத கோலமொன்றை தெரியாத கோலமாய் !

சோலைக் குயிலெனச் சுற்றிப் பறந்து
சொர்க்கத்தின் நிழலில் சுகந்தம் கண்டு
வாலைக் குமரியாய் வாஞ்சைத் துள்ளலில்
வனப்பாக வரைந்தது வண்ணக் கோலங்கள்

நித்தியத்தின் வாசலில் நிமிடத்தில் யுத்தம்
சத்தமின்றிப் போட்டது சடுதியிற் கோலம்
சுற்றியே நின்ற சுந்தரங்கள் விட்டு
ஒற்றையாய் வந்தது ஓலமிடுங் கோலமாய்!

வசதியிற் புரண்டாலும் வனப்பில் உருண்டாலும்
வாட்டமுடன் பெற்றவர்கள் வழியனுப்பி நின்றநிலை
எப்போதும் நெஞ்சினிலே மக்காமல் மழுங்காமல்
நீக்கமற நிறைந்திருக்கும் அழியாத கோலமாய்!

கீத்தா பரமானந்தன்
04-11-24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading