குறை 83

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-09-2025

குறையென்பது ஏது?
கூடயிருப்பது தான் யாது?
நிலையானது ஏது?
நிலைத்திருப்பது தான் யாது?

குறையிலா மனிதன் யார்
குறுகிய வாழ்வினிலே
நிறைவானவர் யார்
நிலையற்ற வாழ்வினிலே

மலையான சோகம்
மனதினுள்ளே.. குறையா?
மறந்து துறந்து
மாறுவது நிறைவா?

குறை எங்கும் தேடுமுன்
கூர்ந்து தேடிடுவோம் எம்முள்ளே
ஒளியாக்கி வண்ணமாக்கி
ஓயாது நிறைவாக்கி வாழ்வோம்.

Jeba Sri
Author: Jeba Sri