கெங்கா ஸ்ரான்லி

வளர்ந்த குழந்தைகள்
———
வந்துதித்தோம் மண்ணுலகில்
மனித ஐன்மம் எடுத்து
எந்தையரும் ஈன்றெடுத்தார்
எம்மையிங்கே குழந்தைகளாக
சந்தம் போல சங்கமித்து
சுற்றம் சூழ வாழ்ந்திருந்தோம்
பந்தம் பாசம் பற்று சேர்ந்து
சொந்தமாக சுழற்சி கண்டோம்
இல்லறத்தில் இணைந்ததினால்
இன்று நாம் வளரந்துவிட்டோம்
நல்லறத்தில் ஏற்றம் கண்டு
நன்மக்கள் பெற்றெடுத்தோம்
இன்று அவர் வளர்ந்து்விட்டார்
எம்மையே மிஞ்சிவிட்டார்
கண்ணிஉலகில் கரைகாணாத் தேடலிலே
எண்ணி நாமும் இறுதமாந்தோம்
இவர் அறிவை வியந்தபடி
குழந்தைகள் என்றும் குழந்தைகள் அல்ல
பருவ வளர்ச்சியும் அவர்க்குண்டே
வள்ர்ந்தபின் வளமான வாழ்வை
தமதாக்கிக் கொள்ள திறமையுடன்
செயலாக்கும் சிற்பிகளாம்
இவர்கள் வளர்ந்த குழந்தைகள்
தாமே என்பதினால்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading