கெங்கா ஸ்ரான்லி

ஒளியின்றி ஒளர்வெங்கு
————-
ஒளிதான் மனித வாழ்வின் இயங்கு முறை
ஒளியினால் தான் பகல் இரவு பேதமே
தீப ஒளிஏற்றி தெய்வத்தை வணங்கலாம்
தீபத்தினால் சில பொருட்களையும் எரிக்கலாம்
கண்ணில் தெரியும் காந்த ஒளி
கடவுளின் அம்சமெனும் அருள் ஒளி
கண்டவர் வாழ்வில் ஞான ஒளி
காத்திடுமே அவர் போகும் வழி
கார்த்திகை மாத தீபொளி
கார்த்திகேயன் மலர்ந்த ஒளி
கார்த்திகைப் பூக்கள் மலர்ந்தது
மாவீர்ர் நாளின் மனம் கனத்து
ஏற்றிடும் ஒளி
ஒளியின்றி உயிர்கள் வாழ முடியாது
ஒளி இல்லாமல் எதுவுமே இல்லை
ஒளியில்லா வாழ்வில் விடியலுமில்லை
ஒளியின்றி ஒளிர்வெங்கு காட்டும்

Nada Mohan
Author: Nada Mohan