இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
கெங்கா ஸ்ரான்லி
கல்லறை வீர்ரின் கனவு
—————
கல்லறை எதனால் வந்தது
கண்டமே அதற்குள் அடங்கியதே
சொன்னவற்றை செய்தார்களா
சோகம் தானே மிஞ்சியது ஏமாற்றத்தால்
கேட்டது தாய்மண் சுதந்திரம்
பட்டது மனதில் போராட்டம்
தொட்டது உணர்ச்சிப் பிழம்பு
விட்டது வேங்கைகளின் வேலம்பு
பேச்சு வார்த்தை பெரும் விகடம்
பேசிப்பேசி காலம் போனது
ஆகவே ஆயுதம். தரிக்கப் பட்டது
அதனாலென்ன வீர வேங்கைகள் வெற்றி யீட்டினர்
எதிரியின் அறமற்ற போரினால்
அழிந்தது தமிழ்மக்கள்
எம்மவர் அறம் கையாண்டதால்
இழந்தது எம்மினத்தை
இளவயதிலும் இனிமை அனுபவிக்காது
இன்னல்கள் பலபட்டு போராடி
எம்மண்ணுக்காய் தம்இன்னுயிர்
ஈந்த மாவீரச் செல்வங்களே
உங்களுக்காய் செலுத்து கின்றொம்
அஞ்சலிகள்
கல்லறையில் நீர் துயில் கொண்டாலும்
கேட்்கிறதா எமது குரல்
உம் கனவு ஒருநாள் நனவாகலாம்
அன்று கல்லறையும் மகிழ்ச்சி யடையுமே
அதில் உறங்கும் உமக்கும் தெரியுமே
மகிழ்வு உமக்கும் வீரமணிகளே

Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments