தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
பாமுகமே வாழீ
——————
பாமுகமே வாழீ பரந்தளவில் பேணி
வாமுகமே என்று வரவேற்ற பண்பு
தேனமுத தமிழை திக்கெட்ட பரப்ப
வானொலியை தந்து வரப்புயர வைத்தாய்
பாவலர் வந்து பாவை இச்சைத்தனர்
பன்முக கலைஞர் பன்முகம் காட்டினர்
பிஞ்சுகள் வந்து மழலைச்சொற் பொழிந்தனர்
வஞ்சனையில்லா வரப்பிரசாதம் என்றே
துலக்க துலக்க மின்னும் பொன்போல
படிக்க படிக்க வந்த தமிழ் போல
படியுயர்ந்து பரவசமாக்கிய பாமுகமே
ஆடுத்த தலைமுறைக்கு ஆக்கமூட்டி
எழுத வைத்த எழுத்தாணிபோல
இந்த தலைமுறையும் உருவாக்கி வைத்தீரே
ஏணிப் படியென ஏறவைத்து பலரை
ஏற்றம் காண வைத்து
அவர் ஏறிய பின் உதைத்தும்
விட்ட துண்டே
இருந்தும் தொடர்ந்து நடந்த பாமுகமே நீ வாழீ
படைப்பாளி தொகுப்பாளி
கற்றவர் பெற்றவர்
நன்றி நவில நீ வாழீ
இருப்துவும் தொடர்வதும்
இனி உன் ஈடேற்ற எண்ணக் கனவே
வளர்க வளர்க்க வருங்காலம் சிறக்க
பாமுக வளர்ச்சியோடே
பயணிக்கும
அனைவருக்கும்
களம் தந்த பாமுக அதிபர்
நடாமோகன் துணைவி வாணி மோகனுக்கும்
நன்றி நவின்று பாராட்டி வாழ்த்துகின்றோம்
பாமுகமும் நீவீரும் வாழிய வாழீ!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
10.6.24
