கொழுந்தைப் பறித்த கொழுந்து

ராணி சம்பந்தர்

உள்ளம் கொதிக்கிறது
வெள்ளம் சாதிக்கிறது
பள்ளம் சோதிக்கிறததே
அள்ள அள்ளத் தோண்டக்
கண்டு பிடித்த உடலமும்
கண்டு பிடியாத பிணமும்
வதைத்துத் துவைத்ததே

கொழுந்து பறித்து வளர்ந்த
குழந்தைகள் விழுந்து விழுந்து
மெல்ல எழுந்த மலையகத்து
மாந்தரை அதே கொழுந்தில்
கொழுந்தோடு கொழுந்தாய்ப்
பசி மோகம் தீர்க்கப் புதைத்ததே

சூழ்ந்து வந்திடும் செயற்கைக்
கெடுகேடுகளில் அவதியுறும்
இயற்கையோ செய்வதறியாது
அப்பப்ப அலங்கோலமாகவே
கிள்ளியெடுக்கும் கொழுந்துகளில்
அள்ளி எடுக்கும் உயிர்களிலே
தாகந்தீரத் துவைத்துத் துவைத்து
சிதைக்கிறதே .

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading