க.குமரன் 2.5.23

சந்தம்சிந்தும்
வாரம் 220

நடிப்பு

மறை பொருள் வந்தனம்
மனதிற்குள் ஒரு தந்திரம்
வாயிலே ஒரு பேச்சு
வந்திடுமோ என பெருமூச்சு

காசுக்கு சிலபேர் குத்து
கபடம் கொண்டு வேத்து
நடிப்பு ஒரு கலை
நாளும் அதில் திலை

சில்லரையாக சில பேர்
கோடிகளாக பல பேர்
வாய்தவரை நடி
வளைச்சு போட்டு வாழு

எங்கும் இந்த நடிப்பு
ஏன் இந்த துடிப்பு

அறிவைத் தீட்டி விடு
அகலக் கண்ணை திறந்து விடு
தண்டோரா போட்டு விடு
சந்தோசம் என்று விடு

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading