க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம்—239

அந்திசாயும் நேரம்
அந்த பஸ்சின் ஓரம்
சாரதிக்கு அருகே
பயணம் செய்யும் நேரம்

மேலாடை அற்ற மனிதன்
போதையில் தள்ளாடும் ஒருவன்
டிக்கட் எடுக்க
காசு இல்லை
பஸ்சை எடு என வினவி
நுழைந்து பின்சென்றான்
ஓடாது பஸ் ஸ்தம்பிக்க!

ஒடி வந்து துப்பினான் சாரதிக்கு
இறங்கும் வரை
ஓடாது என்று சொல்ல
ஓங்கி அடிக்க
தீ அனைப்பு போத்தலை
எடுத்தான்

கட்டிய போத்தல்
கைக்கு எட்டவில்லை!
இறங்கி கல் எடுத்து
அடித்தான் கண்ணாடிக்கு!

வன்மம் செய்தவனை
வாரி அனைக்க
பொலிசை அழை என்றோம்

வீதியில் நடப்போருக்கும்
விசனங்கள் நடக்கலாம்
அச்ச நினைவுகளில் நின்று
ஆறுமோ மனது!…..,

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan