க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 243

எச்சம். (குறை)

எச்ச நினைவுகள்
மனதில் குற்ற நினைவாக
வட்ட மிடும்
கோலம் சொல்வேன்
நண்பா!

இன்னும் கொஞ்ச நேரம்
இருந்தால் தான் என்ன ?

என் இடத்தில்
வேலை செய்யயும்
எச்சம் கழுவும்
தொழிலாளி
வைத்திய சாலையில்
வைத்துக் கேட்டான்

உறவுக்கார நோயாளியை
பார்க்க போன போது
எதிர்ப் பட்ட
சக தொழிலாளி!

என்னை பார்க்க
வந்தாயா என்றான்?
மனம் புண்படாமல்
ஆம் என்றேன்

குறைந்த கனங்களை
அவனுக்கு அளித்து
ஆறுதல் கூறி புறப்பட்டபோது

இன்னும் கொஞ்ச நேரம்
இரு என்றான் கெஞ்சலாக!

பிரமச்சாரி
வேலையே வாழ்வு
என்று இருந்தவன்
ஆனாலும் சமாதானம்
சொல்லி புறப்பட்டேன்

ஒரு வாரத்தில்
அவன இறந்ததாக
செய்தி வந்தது!

அவன் கேட்ட
எச்ச கனங்களை கொடுக்காது
மன கனக்கின்றதே
நண்பா …

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan