சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 286
காற்று
அது காதோரம்
எனக்கொரு
கதை பேசியதோ ?

நேற்று
நினைவாகத் தவழ்ந்து
இன்று கனவாக மிதந்த கதை
சொல்லிப் போயிற்றோ ?

வேற்று
உணர்வோடு கலந்து
மீட்டி செவியோடு இணைந்து
கடந்து போனதொரு கணமோ ?

போற்றி
பூத்ததந்த உறவதுவும்
பூட்டிய மனக்கதவை யுடைத்து
பறந்த கதை பரவியதோ ?

சேற்று
நிலமதில் விளைந்த
செந்தாமரையின் வனப்பை
ரசிக்க மறந்த அதன் விளைவோ ?

மாற்று
மனதின் இயல்பை என
காட்டி இயற்கையது புகட்டியதைத்
தெரிந்து கொள்ளும் கணமோ ?

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading