சக்தி சிறினிசங்கர்

வியாழன் கவிதை
விடியலில் உன்னதம்!
அகங்காரம் அற்று அனைவரும் சமமென
பகலவன் கெடுக்கிறான் பளிச்சென்ற ஒளியினை
வெளிறிக்கிடக்கின்ற வெற்றுவாழ்வு மலர்ந்திடவே
தளிர்விட்டுத் தழைக்கின்ற தாவரங்கள் சொல்லுதே
அர்த்தம் பொதிந்த எதிர்காலம் மலரக்
கர்வம் கொண்டதில்லை கதிரவன் ஒருபோதும்!
விளக்கின் ஒளிபோல விடியலும் பிரகாசிக்கும்
களங்கம் இல்லாக் கனிவான காலையில்
இமைவிழிக்க இருள்அகல உதயமாகும் நாளது
சுமையில்லாப் பொழுதாகி சுகராகம் இசைத்திட
தளர்விலா மனத்துடன் தடைகளும் தாண்டியே
வளமாகும் வாழ்வுக்கு வழிகளைத் தேடி
நலமோடு வாழ்ந்து நாடும்வீடும் சிறக்க
விடியலைத் தேடி விடாமுயற்சி செய்து
படிக்கற்களாய் பகிர்ந்து ண்டு வாழ்தலே உன்னதமே!
,நன்றி வணக்கம்!
கவிதைநேரத் தொகுப்பாளினிகளுக்கும்
வாணி மோகனுக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகுக!

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading