சக்தி…

சக்தி…
சர்வமும் வியக்கும் சக்தியின் கொடை
சகலமும் சக்திக்குள் அடைக்கல நிலை
சுழலும் உலகில் சுற்றிடும் சக்தி
சுற்றுச் சூழலின் பரிணாம வளர்ச்சி

இயங்கு சக்தியாய் இயல்பிலே ஒன்றும்
இல்லாது போயின் வாழ்வே குன்றும்
வல்லமை நிறைந்த சக்தியின் வரம்
வாழ்வின் ஆதார சக்தியே உரம்

எண்திசை நிறைந்து வியாபிக்கும் வினையம்
எதிலும் இயங்கும் சக்தியின் வேகம்
குன்றாது வாழின் குவலயம் மிளிரும்
சக்தியே சர்வத்தின் ஆதார மூலம்!

நன்றி
வசந்தா ஜெகதீசன்

Author: