தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சாதனை ஏட்டில் நாயகன் பதிப்பு

நகுலா சிவநாதன்

சாதனையின்ஏட்டில்
நாயகனின் பதிப்பு

பாமுக அதிபரே பன்முக சாதனை
நான்முக வாழ்வின் சரித்திர நாயகன்
அடுத்த தலைமுறையை
அணைத்து வளர்ப்பவர்
எடுத்த கருமத்தில் உறுதியோடு
இருப்பார்
பாமுகப் பந்தல் இலண்டன் தமிழ்
சண்ரைஸ் என்ற சரித்திரம்
சொல்லும் இவர் சாதனை
அறிவிப்பாளராய் அணைத்தெடுக்கும் முத்தாய்
வித்தான தமிழுக்கு விளங்கும்
விடிவெள்ளி
நவீனங்களை நற்றமிழோடு
இணையவழி இங்கிதமாய் கொண்டு வந்த சாம்ராட்சியம்
எங்கள் அதிபர்
கொட்டும் மழையிலும்
விட்டுவிடா பொழிவு இவர் தமிழ்
வாழ்வியல் சிந்தனையும்
வரலாற்று முகமும்
வண்ணத்தமிழோடு
வளருது கண்டீரோ!!
சாதனை விருதை பெற்ற அதிபரை
பல்லாண்டு வாழ்த்துவதில்
மகிழ்வடைகிறோம்
காந்தக்குரலில் கண்ணியமானவரே
காலம் உங்களை வாழ்த்தும்
வாழ்த்துகிறோம் வாழிய வாழியவே!!
விருதின் உயர்வும் விளங்கும் பணியும் ஓங்கட்டும்

நகுலா சிவநாதன்1785

Nada Mohan
Author: Nada Mohan