அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சாமினி துவாரகன்

நடுத்தர வர்க்க பரிதாபங்கள்
—————————-

கடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள்……
ஒவ்வொரு வீட்டிலும்
வயசுக்கு வந்த
பெண்கள்……

பேரம் பேசவும்
வேடிக்கை பார்க்கவும்
ஒரு தொகை கூட்டம்…..
வெள்ளை நிறத் தோலும்
கை நிறைய
சீதனமும்
தேடும் ஓர்
கூட்டம்……

விற்பனையாகாமல்
நாளைய வேடிக்கைக்காக
கடையில்
அலங்கரிக்கப்பட்ட
பொம்மைகள் ….
பொண்ணு பார்க்கும்
படலம்
நாளும் தொடர்ந்த
வண்ணமாய்
ஒவ்வொரு
வீட்டிலும்
வயசுக்கு வந்த
பெண்கள்…….

-சாமினி துவாரகன்-

Nada Mohan
Author: Nada Mohan