தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சாமினி துவாரகன்

வண்ண சேலை உடுத்தி
வகிரெடுத்து பூச் சூடி
வண்ண எடுப்புடனே
வருகிறாள் வருட மகள்
வருக வருக நீ!!!

எண்ணம் எல்லாம் கோலமிட்டு
ஏற்றி வைத்த தீப மதில்
எதிர்மறை சுட்டெரித்து
எழுக்கின்றாள் வருட மகள்
வருக வருக நீ!!!

கண்ணிலே ஒளி கொண்டு
கருத்திலே வழி விட்டு
துன்பத்தை துடைத்தெறிய
கரம் நீட்டி வருகிறாள்
வருக வருக நீ!!!

புன்னகை பூத்து
புதுப்பொழிவு கொண்டு
புது வாழ்வு தரவென
புது ஆண்டு பிறக்கின்றாள்
வருக வருக நீ!!!

சாமினி துவாரகன்
07.01.2025

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading