தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

சிவதர்சனிஇரா

வியாழன் கவி 2259!!

மனிதம் மறந்தவை..

இருப்பாகிக் கிடந்த
பற்பல பண்புகள்
பறந்தே தான் போயின
பண்பட்ட உலகினில்
புண்பட்ட மனத்தை
புரையோடிப்போன வலியை
ஆற்றிட முடியா ஆங்காங்கு..

வாயில்லா சீவன்களும்
வார்த்தை இல்லா திங்கே
உணர்வினில் ஒன்றித்தே
தந்திடும் பாசமதனை
பட்டொளி வீசி எங்கும்
காண்கிறோம் மறுப்பென்ன
ஏமாற்றமும் ஏமாளித்தனமும்
கண்பட்டுப் போனது மனிதரில்
கற்பூரமாய்ப் பற்றினவே..

வற்றிப் போன வடிகால்
விழியெனும் ஆறு குளம்
ஊரெல்லாம் நீரில் மூழ்க
இதுவே துயருண்ட மனம்
எப்படி இலக்கணம் காண
காண்பதை கடந்து போவதை
காரியம் ஆற்றுவதை
ஏற்றே நகரும் நவீன வாழ்க்கை..
சிவதர்சனி இராகவன்
18/12/2025

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading