சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1904!

கல்லறை வீரரின் கனவிதுவோ..!

விழி மூடித் தூங்கும்
வீரர்களே நீவிர்
கண்ட கனவிதுவோ
நாம் எதை உரைப்போம்
தேசத்தின் விடியலுக்காய்
உயிர் அமுதைத் தந்தே
உறங்கும் மாவீரரே
உங்கள் கனவின் தீரம்
அறியாதவராய் நாமோ…!

ஒன்றுபட்ட ஓர் தேசம்
ஒற்றுமைப்பட்ட எம் இன
சுதந்திர வாழ்வு
அடிமைத் தழை ஒடித்து
அரக்கத்தனம் கொண்ட
எதிரியை எதிர்த்து
எத்தனை களங்களைக்
கண்டவர் நீவிர்…!

இன்றோ இலக்கு எது
என்பதும் அறியாதவராய்
வேற்றுமைப் பட்டு
வேரறுந்து நிற்கிறோம்
உங்கள் உதிரத்தின்
துளிகளுக்கு பதில்
தேடித் தவித்திருக்கிறோம்
விடியல் ஒன்று உம்மால்
நாம் பெறவேண்டும்
என்றே காத்திருக்கிறோம்..!
சிவதர்சனி இராகவன்
23/11/2023

Nada Mohan
Author: Nada Mohan