மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1787!

கரையும் தண்ணீரில்
நிறையும் கழிவுகள்!

நீரும் வேண்டும்
வாழ்வின் தேட்டத்துக்கு
விளையும் பயிருக்கு
வானமுதம் நீராகும்
நீரைப் பேணி
அளவாய் அனுபவிக்க
உலகின் தேவையும்
உவப்பாய் நிறையும்!

உழைத்துச் சேர்க்கும்
பணத்தில் பாதி
உதவாது போதல்
என்ன நியதி
குப்பை தேங்கி
குவலயம் அழியும்
நிலையே நாளை
நிலைப்பது காண்போம்!!

கரையும் நீரைக்
கவனமாய்க் காத்து
நிறையும் கழிவை
நித்தம் குறைக்க
நன்மை கிட்டும்
நலவாழ்வு கைக்கெட்டும்!!
சிவதர்சனி இராகவன்
29/3/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading