சிவருபன் சர்வேஸ்வரி

கல்லறை வீரனின் கனவிதுவோ
<<<<<<>><&&&&<<<<<<<

கனவு கண்டேன் _ நான்
கனவு கண்டேன்
காலம் கனிந்து வரக் கனவுகண்டேன்
காலத்தின் கோலமதால் _
என் கனவுகல்லறைகுள்
கலையுதடி

முடி சூடும் நாளையெண்ணிக் _ நாண் கனவு கண்டேன்
மலரும் விடிவென்று கனவு கண்டேன்
மறத்தின் பறை ஒலிக்குமென்று கேட்டெ நின்றேன்
மரணித்துக் கல்லறையில் உறங்கி விட்டேன்

வீரம் ஒங்குமெனக் கனவு கண்டேன்
தாகம் தீருமென விழித்து நின்றேன்
தணியாததீரத்துடன்
போர் தொடுத்தேன்
மரித்து நின்றேன் கல்லறையில்
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன்பாய்ந்தது
உள்ளத்திலே
தோழமை கொண்ட கனவுகளோ கல்லறையில் என் கனவிதுவே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan