சிவாஜினி சிறிதரன்

சந்த கவி வாரம் _153

“நடிப்பு”
பாத்தால் பசு
பாய்ந்தால் புலி
பசும் தோல் போத்த புலியான நடிப்பு
ஏன் இந்த பிழைப்பு!

உக்கிரேன் றசியா
உக்கிரமான போர்
பக்க துணையாக
பக்க வாத்தியம் பாடும்
நாடுகளின் நடிப்பு
அதில் ஒரு பிழைப்பு!

வியாபார நிலையம்
தள்ளுபடி தள்ளுபடி
தள்ளி விடும்
தரமில்லா பொருட்களில் நடிப்பிலும் ஒரு உழைப்பு!

தகவல் பரிமாற்றம்
சட்டென பாத்துவிட்டு
பாக்காத கேட்காத மாதிரி ஒரு
நாடகம் நடிப்பு!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
21.06.24.

Nada Mohan
Author: Nada Mohan