மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_165

“ஆசான்”
கல்விக்கு ஆசான்
கற்றலுக்கு
பேர் உதவியாக
கற்றதும் பெற்றதும் அதிகம்!

முள்ளிய வளையை
பிறப்பாகவும்
ஒட்டுசுட்டானை வாழ்விடமாக
கொண்ட தில்லையம்பலம் நடராஜா எங்கள் ஆசான்!

ஒட்டுசுட்டான்
மகாவித்தியாலயத்தில்
ஆசிரியராக பணியாற்றி
தலமை ஆசிரியர் பொறுப்பை
கற்சிலைமடு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையை பொறுப்பு ஏற்றார்!

ஆண்டு ஒன்று தொடக்கம்
ஐந்து வரை
இருந்த பாடசாலையை பத்தாம்
வகுப்பு வரை
ஏற்றி வைத்து ஏற்றம் கண்டார்!

காடாக இருந்த
விளையாட்டு மைதானத்தை பெற்றோர்களின் பேர் உதவியுடன் புனர்ரமைத்து விளையாட்டு வீரர்களையும் ஊக்குவித்தார்!

எல்லை விளையாட்டுக்கு
எல்லை கடந்த வீரர்கள் வந்து
விளையாடி மகிழ்ந்தனர்!

பல கல்வி மான்களை
உருவாக்கிய பெருமை
எங்கள் தில்லையம்பலம் அதிபரை சாரும்!

தமிழில் மட்டும் பண்டிதர் அல்ல
ஆங்கில பாடத்தை சரளமாக கற்பித்து
மாணவர்களை ஊக்குவித்தார்!

பத்தாம் வகுப்பு
படிக்கும் போது
சனி ஞாயிறு
கிழமைகளில் பாடசாலையில் வகுப்பு எடுத்து
ஏனைய ஆசிரியருக்கும் அதை பின்பற்ற வைத்தார்!

எங்கள் வீட்டில் ஏழு பேர் இவரிடம் கற்றோம்
என் அக்கா தட்டெழுத்தாளராக பணியாற்ற
இவருடைய ஆலோசனை தான் காரணம்!

காலத்தால் அழியாத காவிய நாயகன்
என் அப்பாவின் நண்பன்!

2005 அப்பா மரணச்சடங்கில் இவரை
இறுதியாக பாத்தேன் !

இன்று ஒட்டுசுட்டான்
மகாவித்தியாலயத்தில்
எங்கள் ஆசான் மாணவி அதிபராக!

கற்சிலைமடு
அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் ஆசான்
மாணவன்
ஆதிபராக பணியாற்றுவது பெருமை! அருமை!

சென்ற ஆண்டு 85 வயதில்
இறைபாதம்
அடைந்தார்
ஆற்றல் மிக்க ஆசான்
நெஞ்சில் இருந்து அகலமறுக்குது மனசு!
நன்றி
வணக்கம்
21.10.24
சிவாஜினி
சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading