மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 280 ]
“வெற்றிப்பயணம்”

“சந்திரனில் மனிதனின் பாதம்பதிந்தது”
“செவ்வாயில் உயிர்வாழ தகுதிகாண் ஆராய்ச்சி”
விண்வெளி ஆராய்ச்சிவெற்றிப்பயணச்செய்திகள்
மனிதன் கிரகங்களில் உலாவும் இச்சமயம்

தாய்நாட்டில்தொலைத்தபணத்தை தேடும்அவலம்
கையாடல்தலைவர்கள் நாட்டைவிட்டு தப்பிஓட்டம்
அன்று உற்பத்தியில் தன்னிறைவான தாய்நாடு
அந்நியர் ஆட்சிபோய் எழுபத்தாறு ஆண்டு

இனத்துவேஷஅடக்குமுறை ஆட்சிநிலைப்பாடு
அகப்பட்டதைச்சுருட்டுதல் அவர்கள் தொழிற்பாடு
மாறிமாறி ஏமாற்றி ஆட்சியமைத்தவர்கள் பெருந்தோல்வியோடு தலை கவிழ்ந்தார்கள்

எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது
ஜனநாயகம் பணநாயகமாய் மாறிய அதிசயம்
பசிவந்திடப்பத்தும்பறந்துபோதல் வாழ்வில் நிஜம்
உணவு,மருந்து,எரிபொருள்,போக்குவரத்தில்லை

உழைக்கும் வர்க்கமோவெளிநாட்டில் தஞ்சம்
எஞ்சியவர்கள் ஏமாற உயிர்தவிர ஏதுமிச்சம்?
ஆட்சிமாற்ற அவசியத்தில் மக்கள்திரண்டசம்பவம்
பாட்டாளி பதவிஏற்றம் நல்லாட்சிவெற்றிப்பயணம்

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading