தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 286 ]
“சூர வதை”

ஊரெங்கும் திருடர் உலாவவே முடியாது
பெண்களோ தனியச்செல்ல முடியாது
நகைபறிப்பு கற்பழிப்பு தப்பமுடியாது
ஆண்களென்ன விதிவிலக்கா? வாழவேமுடியாது

ஆட்கடத்தல்,வாள்வெட்டு,கப்பம் என்றுமே குறையாது
காவல்துறை எப்போதும் விழித்துக்கொண்டே தூங்கும்
கொடுப்பதை அட்டியின்றி கூசாமல் வாங்கும்
நிலையத்தில் விறைப்பாய் ஏறு நடைபோடும்

போதைமருந்து உள்ளே சென்றால் அச்சமெல்லாம் பறப்பு
தாயென்றும் தாரமென்றும் புரியாதொரு உணர்வு
மனிதகணம் அசுரகணமாய் மாறிய நினைப்பு
ஆட்சிசெய்வோருக்கும் அதிகார துஷ்பிரயோகவிருப்பு

செங்கோலாட்சி நடக்குதா என்றதொரு மலைப்பு
அசுரர்ஆட்சி மொத்தமாய் அரங்கேறும் நிகழ்வு
ஆண்டவனவதாரம் இந்நேரம் வரும் ஞாபகம்
துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம்

நரகாசுரனை அழித்த தீபாவளி தினம்
சூரனை அழித்த கந்தஷட்டி விரதம்
எண்ணற்ற விரதங்கள் தோன்றியதன் பலன்
சூரனை வதைத்து ஆறுதல் காணும் மனம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan