பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-05-2025 பள்ளிப் பருவத்திலே புத்தகப் பையும் சீருடையும் புன்னகை கலந்த முகப்பொலிவும் எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 245 ]
“காதல்”

காதல்! காதல்! காதல் போயின் சாதல்!
உருவமற்ற உணர்வு! உயிரையும் வென்ற காதல்!
மென்மையான மேன்மையான உணர்வே காதல்!
ஆண்,பெண் இயல்பூக்கமாய் மிளிர்வது காதல்!

காதலும் காமமும் ஒன்றெனக்கூறுவாருமுளர்
இரண்டும் வேறுவேறென உரைப்பாருமுளர்
உள்ளம் உணர்வது காதல், உடல் வயப்படுவது காமமென்பர்
மலர்ந்து மணம் வீசும் உத்தமகாதல் வாழ்வில் ஒருமுறையென்பர்!

தென்றலாய் மலரும் காதல் வீறுகொண்டெழுந்தால் காமப்புயலாகவும் மாறும்
உண்மைக்காதலின் தோல்வி அழியாத காவியங்கள் ஆனது வரலாறு!
காதலும் வீரமும் போற்றியமொழிகள் என்றும் உயர்ந்து நிற்பது கண்கூடு!
காதலேயில்லாத மானிட வாழ்வு உயிரில்லாத உடல் போலாகும்!

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan