சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) …சூடு பிடிக்கிறது….09.07.2026

பச்சைப்புல்வெளி போர்க்களமாக
பந்து மட்டும் ஆயுதமாக
வீரர்கள் கால்களோ பம்பரமாக சுழல
விசில்சத்தம் வானைப்பிளக்க
அம்பயரெல்லாம் அங்குமிங்குமாய் ஓட்டம்
காலிறுதி நோக்கி நகர்கிறது ஆட்டம்
சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம் !

எந்தஅணி வெல்லுமென்ற அங்கலாய்ப்பு
எல்லோர் மனதிலும் ஏதோ ஒருஎதிர்பார்ப்பு
உணர்வுகளின் திருவிழாவாக
உற்சாகத்தின் பெருவிழாவாக
வெற்றிக் களிப்பின் வீரகாவியமாக
வீறுநடை போடுகிறது உதைபந்தாட்டம் !

நாடுகள்பலவாம் மொழிகளும்பலவாம் பந்துமட்டும் ஒன்றாம்
பந்து உருளும்வரை நம்பிக்கையும் வாழும்
விசில் ஒலிக்கும்வரை விளையாட்டும் தொடரும்
கடைசி நொடியிலும் அதிசயமும் நிகழலாம்
கற்றுத்தரும் அனுபவப்பாடம் உதைபந்தாட்டம்
உலகையே கட்டிப்போடும் உணர்வின் விருந்து இது !

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading