ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சொற்சோர்வு படேல்

சொற்சோர்வு படேல் ளினமாக வார்த்தையாடேன்
பிறருக்கு சொல்பவைகளை மறந்துமே நிற்க்கேன்
தேவை இல்லாததை என்றும் விளம்பேன்

அவசியம் ஆனதை தவறவும் விடேன்
எண்ணியதை மறந்தே ஏமாற்றம் கொள்ளேன்
நினைவுப் பெட்டகமாய் அகத்தில் சுமப்பேன்

சட்டென்று செப்புவேன் சாதுரியமாகப் பேசுவேன்
மட்டம் தட்டும் அளவிற்குப் போகேன்

என்றெல்லாம் இயம்பியே வாழ்ந்தால் /
நல்நிலைகள் தோன்றும் நன்மைகளும் நவின்றோங்கும்
இத்தனையும் மறவாதே இப்படித்தான் வாழ்வும்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading