மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-15

31-08-2023

இதுவும் கடந்து போகும்…

கலங்கிய நீரும் குழம்பிய மனமும்
தெளிந்தே தீரும், ஒரு நாள்.
பழையது போய் புதியது தோன்ற
பகைவர் மாறி நண்பராயும் ஒரு நாள்
தீயவர் தேறி நல்லவராயும் மறு நாள்.
நாணயத்தில் பக்கங்கள் இரண்டு போல
பல பக்கங்கள் கடந்து போகும்.

வெற்றியில் கர்வமும் வேண்டாம்
தோல்வியில் விழுதலும் வேண்டாம்.
துக்கத்தில் மூழ்தலும் வேண்டாம்.
காகிதத்தின் பக்கங்கள் இரண்டு போல
புரண்டு போகும் எது இடரினும் தொடரினும்.
இதுவும் கடந்து போகும்.

சுட்டெரிக்கும் சூரியன் போல் விட்டெறிவோம் சோகமிதை,
எதுவும் நிரந்தரமில்லா உலகில்
துன்பமும் துயரமும் நிரந்தரமா??
வேகமாய் மாறுவோம் விஞ்ஞானியாய்..
எதுவும் கடந்து போகும்.

இன்றைய வலிகள் நாளைய பலமே
நல்லது கிடைத்தால் வெற்றி
அல்லது இதுவே அத்தியாயம்
தொட்டது துலங்க கெட்டது விலக
பட்டது போக பலருடன் பேச
மறையுமே சோகம் நினைக்க..
இதுவும் கடந்து போகும்.

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading