தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-17

26-10-2023

பள்ளிக்காலம்

பெற்றோரின் கனவுகளை
புத்தகமாய் முதுகில் சுமந்து
பள்ளிக் கூடம் சென்ற காலம்
மற்றோரின் கனவல்ல
புரிந்து கொண்ட நல்ல நேரம்!

படிப்பு மட்டும் வாழ்க்கையற்று
பட்டாம் பூச்சி போல் பறந்த காலம்
சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி சமத்துவமாய்
பக்குவமும் கொஞ்சம் பயின்றகாலம்

சின்ன சின்ன சேட்டைகளும்
சீண்டிப் பார்க்கும் வயசும் இது
எந்த வயதில் நுழைந்தாலும்
பழைய நினைவை மீட்டுத் தரும்
பசுமையான அந்தக் காலம்!

வீடு எனும் சிறையிலிருந்து
திறமைகளை வெளிக்கொணர்ந்த
திறவுகோலும் பள்ளிக்காலம்
பெற்றோர் போல ஆசானும்
பேரறிவைத் தந்த நேரம்!

தொலைந்து நெடு தூரம் போனாலும்
தொடர்கதையாய் தொடரும்காலம்
கேட்டாலே இனிக்கும் பள்ளிக்காலம்
96 பட்ச் பேரில் உலகளாவில் மேலும்
தொடருது எம் பள்ளிசிநேகிதம்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan