ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-13

01-06-2023

(5ம் ஆண்டு நினைவஞ்சலி) அப்பா

ஆண்டு ஐந்து ஆனாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள்.
மீண்டும் மீண்டும் வந்து எம்மை வாட்டிச் செல்கின்றதே
பாசம் பொழிந்து நேசமாய் எம்மை வளர்த்தெடுத்து
பாரினில் நேர்மையாய் வாழ
வழி காட்டிச் சென்றீர்கள்.

மொத்தமாய் யார் வந்து தேற்றினாலும்
முத்தான தாங்கள் கிடைப்பீரோ
நித்தமும் தவிக்கிறோம் உங்கள்
நினைவுகளால் அப்பா.
வேகாத வெய்யில் சுடுமென கைகளால் தடுத்தெமக்கு பிடிப்பீர்கள்.
வேக வைத்து விட்டு வேதனையில் தவிக்கிறோம்.

தருணமறிந்து தர்க்கம் விலக்கி அருளும் அறிவும் எழுந்த ஆளுமையும் அன்னைக்கு நிகரான அன்பின் பெருமை…!
மனதிற்குள் இன்னும் வலிக்குதப்பா.

அத்தனை உறவுகள் அருகிருந்தும் பித்தன் போல் காலன் வந்து கொண்டு சென்றது கண்ணுக்குள் இன்னும் நிற்குதப்பா.

சொல்லிமாளாது உங்கள் அரவணைப்பு.
சொக்கத் தங்கமாய் எமக்கு கிடைத்தவர் தான் நீங்கள். அலை அலையாய் ஆயிரம் ஆறுதல் சொல்ல யார் வரினும் ஆறாது எங்கள் மனங்களப்பா.

இறப்பு நியதி எனப் படைத்தவன் வகுத்தார்.
மீண்டுமொரு பிறப்புண்டேல் தங்கள் பிள்ளைகளாத் தவழ வேண்டும் நாங்களப்பா.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading