மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-15

22-08-2023

தலையீடு

பிள்ளைக்கு மேல் படிப்பு
பெற்றமனம் பணிக்கும்
வைத்தியராய் வா வெளியே
இல்லையானால்
உபாத்தியாராய் சான்றிடுவே.

நாட்டமற்ற பிள்ளை மனம்
வாட்டம் வலி கொள்ளும்

சட்டத்தரணியான பிள்ளை
பெற்றோரின் தலையீட்டால்
முற்றாக முடிக்காமல்
தோணி இரண்டில்
கால் வைத்தது போல்
கோணி மனம் கொண்டு

மனவழுத்தம் குடி கொள்ள
தன் சொல்லும் தான் கேளா
பேதையாய்த் தான் ஆகி
பிணமாகிப் போனாளே!

நடந்த செய்தி இது கூறும் நீ
நடந்திடு நீ நாடும் வழியிலென
ஊருக்காக வேடமிட்டு
உளம் ஒன்ற வாழாமல்
நாட்டமுள்ள வழியில் நட

பெற்ற மனமுவந்து
பிள்ளை விரும்பியதை
கற்க கை கொடுத்தல்
கடமை உணர்வோமே!

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading