தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பெண்மையைப் போற்றுவோம்

பெண்மையை போற்றாத நாவென்ன நாவா
உண்மையை உரைப்போம் உரக்கவே வாவா
தாயெனும் பாத்திரத்தில் பாசத்தை ஊட்டுவாளே
தாரமெனும் பாத்திரத்தில் காதலைக் காட்டுவாளே

பெண் மேன்மையானவள் பெருமைக்குரியவள் மெய்
என்பதை அறியாதது தருகின்றது வருத்தத்தை
ஓரிரு வித்தியாசங்களே ஈரினத்திற்கு இடையில்
ஓர்பாதியெனக் கொண்டுவிட்டால்
பாகுபாடேது நடையில்

கருவைத் தாங்கவென அவதாரம் எடுத்தாள்
உருவங்களைச் செய்தே உலகிற்கு கொடுத்தாள்
பெண்ணின்றி அமையாது பூலோகம் எனவென்று
கண்களாய் அவளாக நகர்கின்றது பூமியின்று

வாழ்த்திடவே இவளை வார்த்தைகளோ ஏட்டிலில்லை
வாழ்வின் பிறப்பிடத்தை பாடாவிட்டால் பாட்டேயில்லை
தன்சுகத்தை இழந்து சுமைகளை தாங்கிடும் தன்மை
பெண்மையது என்பதுவும் ஆண்டாண்டாக உண்மை

பின்னிருந்து காட்டிய வழிகளால் ஏற்றங்கள்
முன்னிறுத்தி அவளை போற்றுமட்டும் போற்றுங்கள்
உயிர்களை உற்பத்தி செய்பவளை வாழ்வுக்குள்
உயர்வான உறவாக்கி உன்னதப்படுத்துவோமே வாழ்த்துக்குள்

ஜெயம்
18-03-2024

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading